fbpx
Course Content
செல்வத்தை ஈர்க்கும் இரகசியம் சொல்லாத இரகசியம்
0/41
Untold Wealth Secret
About Lesson
முன்னுரை

 

செல்வந்தராக உருவாக வேண்டும். பிறருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும். புகழோடு வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்நூலை விரித்துப் பார்ப்பதே அதற்கான ஆதாரம்.

 

உங்கள் விருப்பம் நியாயமான விருப்பம்.

 

ஏதேனும் ஒன்றை அடைய வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் மனிதனிடம் இல்லா விட்டால், மனிதன் சோம்பேறியாகி, தனக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சுமையாகிப் போவான்.

 

அடைய வேண்டும் என்கிற விருப்பம் தான் செயல் படும் படி மனிதனை உந்தித் தள்ளும் விசை. இவ்விசை மட்டும் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால் எந்தக் கண்டு பிடிப்புகளும் உலகில் நிகழ்ந்திருக்காது. எவ்வித முன்னேற்றமும் உலகில் ஏற்பட்டிருக்காது. காட்டுவாசியாகவே இப்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.

 

ஆகவே, உங்கள் விருப்பம் அனைவர் நெஞ்சிலும் இருக்கும் விருப்பமே. ஆனால், ஒவ்வொருவர் மனதிலும் இரகசியமாய் உறைந்து கொண்டிருக்கும் இந்த விருப்பம், அனைவர் வாழ்விலும் நிறைவேறி விடுகிறதா என்று பார்த்தால் அதிக பட்சமாய் ஐந்து சதவீத மக்களின் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது.

 

தொண்ணூற்றைந்து சதவீத மக்கள் ஏக்கம் தணியாத நிலையிலேயே வாழ்ந்து மடிகிறார்கள். காரணம், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை.

 

ஆனால், உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உங்களால் முடியும். ஏனெனில், நீங்கள் அந்த கலையைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.

 

மேலும், உங்களிடம் தேடல் உள்ளது. எங்கே தேடல் உள்ளதோ அங்கே ஆற்றல் இருக்கும். மறைந்து கிடக்கும் ஆற்றலின் கசிவே தேடல். ஆகவே, உங்களுக்குள் அளவற்ற ஆற்றல் முடங்கிக் கிடக்கிறது. முடங்கிக் கிடப்பதை முறைப் படுத்தினால் போதும். நீங்கள் செல்வந்தராக உருவாகி விடுவீர்கள்.

 

செல்வந்தராக உருவாவது மிகவும் எளிது. சில நோய்களிலிருந்து மனதை மீட்டால் போதும். உங்கள் மனமே உங்களைச் செல்வந்தராக உருவாக்கி விடும். ஆகவே, மன நோய்களிலிருந்து மனதை மீட்கும் நுண்ணறிவை, செல்வந்தராக உருவாக்கக் கூடிய சிறப்பறிவை, அடுத்த பக்கத்திலிருந்து கற்றுக் கொள்வீர்களாக!

 

நூலுக்குள் நுழையும் முன்

 

ஒரு இலக்கோடு வாழ்க்கையைத் தொடங்கினால் உரிய வழிகளைப் பிரபஞ்சமே உருவாக்கிக் கொடுத்து, அந்த வழியில் செல்லும் படி உந்தித் தள்ளி, திருப்பங்களில் தேவைப்படும் உதவிகள் செய்து, நம் இலக்கை அடையச் செய்து விடும்.

 

ஆனால், இல்லறம் போர்க் களமானால் பிரபஞ்சம் உதவாது.

 

பணப் பிரச்சினை, குடிப் பிரச்சினை, திருமணத்துக்கு முந்தைய காதல் பிரச்சினை, திருமணத்துக்குப் பிந்தைய காதல் பிரச்சினை, தாம்பத்ய வாழ்வில் பிரச்சினை, கை பேசியில் அடுத்தவர்களோடு பேசுவதால் ஏற்படும் பிரச்சினை, குழந்தையை அடிப்பதால் ஏற்படும் பிரச்சினை, யார் குடும்பம் பெரிது என்று பிரச்சினை, சொத்துப் பிரச்சினை, மாமியார் மாமனார் பிரச்சினை, கலப்புத் திருமண வாழ்வில் ஜாதிப் பிரச்சினை, பெற்றோரைப் பேணுவதில் பிரச்சினை, எது முக்கியம்? குடும்பமா? அல்லது சமூக ஊடகங்களா? என்கிற குழப்பத் தால் ஏற்படும் பிரச்சினை என்று ஏதேதோ தலைப்புக்களில் தம்பதியிடையே சண்டை நடக்கிறது.

 

இல்லற வாழ்க்கை போர்க் களமானால் நிம்மதி இருக்காது. நிம்மதி இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. மகிழ்ச்சி இல்லாத வீட்டில் இலக்கு வைத்து வாழ்வது கடினம். இலக்கை வைத்தே விட்டாலும் இலக்கை அடைய முடியாது. அதனால், அவர்களால் வாழ்வில் பெரிதாகச் சாதித்து விட முடியாது. அதோடு, குழந்தைகளுக்கு சிறந்த எதிர் காலத்தையும் உருவாக்கித் தர முடியாது.

 

ஒருக்கால், பொருளாதார இலக்கை எட்டி விட்டாலும் உடல் நலத் தோடு நீண்ட காலம் உயிர் வாழ அவர்களால் முடியாது. ஏனெனில், இல்லறப் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம், கொலைகார நோய்களை உருவாக்கும். அதனால், இல்லற வாழ்வில் நிம்மதி இல்லாதவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.

 

ஆகவே, மேற்கண்ட சூழல் வாழ்வில் நிலவாமல் இருக்க, தந்த்ரா இரகசியங்கள் என்கிற நூலை படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

 

 

0% Complete