fbpx

Untold Wealth Secret

Categories: Online Reading Books
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

நன்மைகள்

பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக விரும்பும் ஒவ்வொருவருக்கும்.

 

வறுமை என்பது ஒரு நோய். பணமே இந்நோய்க்கான ஒரே மருந்து. மனமே மருந்தை உருவாக்கும் பட்டறை. எண்ணங்களே மருந்துக்கான மூலப் பொருட்கள். ஆகவே, எதைச் சிந்திக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த பின், எண்ணத் தொடங்குவதே, திட்டமிட்டுச் செல்வந்தராக உருவாவதற்கான அறிவியல் பூர்வ தொழில்நுட்ப இரகசியம்.

 

ஏதேனும் ஒன்றை அடைய வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் மனிதனிடம் இல்லா விட்டால், மனிதன் சோம்பேறியாகி, தனக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சுமையாகிப் போவான்.

 

அடைய வேண்டும் என்கிற விருப்பம் தான் செயல் படும் படி மனிதனை உந்தித் தள்ளும் விசை. இவ்விசை மட்டும் மனிதனிடம் இல்லாமல் இருந்திருந்தால் எந்தக் கண்டு பிடிப்புகளும் உலகில் நிகழ்ந்திருக்காது. எவ்வித முன்னேற்றமும் உலகில் ஏற்பட்டிருக்காது. காட்டுவாசியாகவே இப்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.

 

ஆகவே, உங்கள் விருப்பம் அனைவர் நெஞ்சிலும் இருக்கும் விருப்பமே. ஆனால், ஒவ்வொருவர் மனதிலும் இரகசியமாய் உறைந்து கொண்டிருக்கும் இந்த விருப்பம், அனைவர் வாழ்விலும் நிறைவேறி விடுகிறதா என்று பார்த்தால் அதிக பட்சமாய் ஐந்து சதவீத மக்களின் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது.

 

தொண்ணூற்றைந்து சதவீத மக்கள் ஏக்கம் தணியாத நிலையிலேயே வாழ்ந்து மடிகிறார்கள். காரணம், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை.

 

ஆனால், உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உங்களால் முடியும். ஏனெனில், நீங்கள் அந்த கலையைக் இன் நூலின் வாயிலாக கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.

 

மேலும், உங்களிடம் தேடல் உள்ளது. எங்கே தேடல் உள்ளதோ அங்கே ஆற்றல் இருக்கும். மறைந்து கிடக்கும் ஆற்றலின் கசிவே தேடல். ஆகவே, உங்களுக்குள் அளவற்ற ஆற்றல் முடங்கிக் கிடக்கிறது. முடங்கிக் கிடப்பதை முறைப் படுத்தினால் போதும். நீங்கள் செல்வந்தராக உருவாகி விடுவீர்கள்.

 

செல்வந்தராக உருவாவது மிகவும் எளிது. சில நோய்களிலிருந்து மனதை மீட்டால் போதும். உங்கள் மனமே உங்களைச் செல்வந்தராக உருவாக்கி விடும். ஆகவே, மன நோய்களிலிருந்து மனதை மீட்கும் நுண்ணறிவை, செல்வந்தராக உருவாக்கக் கூடிய சிறப்பறிவை நிச்சயமாக இந்நூல் உங்களுக்கு வழங்கும் என்பது உறுதி உறுதி உறுதியிலும் உறுதி !!!

Show More

Course Content

செல்வத்தை ஈர்க்கும் இரகசியம் சொல்லாத இரகசியம்

  • பிரபஞ்ச விதிகள்
  • செல்வந்தராவது ஒரு அறிவியல்
  • நீங்கள் ஒரு மகா வீரர்
  • நீங்கள் தனித்துவமானவர்
  • பிரபஞ்சம் உங்களிடம் உதவி கேட்கிறது
  • பிரபஞ்சம் உங்கள் பூர்வீகச் சொத்து
  • இலக்கற்ற வாழ்க்கை எஞ்சின் இல்லாத வாகனம்
  • நீங்கள் யார்
  • உங்கள் ஆற்றலின் இரகசியம்
  • செல்வத்தை ஈர்ப்பதற்கான இரகசியம்
  • தோல்வி என்பது ஒரு மாயை
  • செல்வந்தராக செல்வந்தரைப் போல் நடி
  • உறவுச் சிக்கல் வளர்ச்சிக்கான தடைக்கல்
  • ஐயமும் ஐஸ்வர்யமும் பரம விரோதிகள்
  • பாதிக்கப்பட்டவர் என்று கருதுவது ஒரு மனநோய்
  • விதைத்தலும் அறுவடையும்
  • மன்னிப்பு விதி
  • நம்பிக்கை விதி
  • செல்வந்தரை வெறுத்தால் செல்வம் வராது
  • இணையைக் கண்டுபிடிப்பது எப்படி
  • எதிர்பார்ப்பு விதி
  • நண்பரும் உறவினரும் ஆபத்தான உயிரினங்கள்
  • செல்வந்தராக உருவாக்கும் மனநிலை எது
  • உலகம் உங்களைப் பிரதிபலிக்கிறது
  • பரிசை மட்டும் பாருங்கள்
  • செல்வந்தராகிட குழந்தையாக மாறுங்கள்
  • செல்வந்தராக உதவிடும் மும்மூர்த்திகள்
  • செல்வந்தராக உதவிடும் இரகசிய மந்திரம்
  • ஆசான் கூறிய அறிவுரை
  • உங்கள் காந்த சக்தியை வலுப்படுத்துவது எப்படி
  • மனோபாவமே வெற்றியின் இரகசியம்
  • உணர்ச்சிகளே வழிகாட்டிகள்
  • தியானமும் பிரார்த்தனையும்
  • உங்களுடைய உள்ளுணர்வைக் கேளுங்கள்
  • செல்வக் களஞ்சியத்தின் தங்கத் திறவுகோல்
  • முடிவுரை