ஒரு தீபம் வேறொரு தீபத்தை இங்கே ஒளிர வைக்கிறது. அந்த வேறொரு தீபம் இனியொரு தீபத்தை ஒளிர வைக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையோடு.
மன நோய்களே செல்வத்தை விரட்டும் காரணிகள். ஆகவே, அவரவர் மன நோய்களே அவரவரைத் தேடி வரும் செல்வத்தை அண்ட விடாமல் விரட்டியடிக்கும்காரணிகள்.
இதை மறுத்தல் அறியாமை.
எதிர்த்து வாதிடல் சுய நாச வேலை.
செல்வத்தை விரட்டும் மனநோய்கள் அனைத்தையும் ஒரே வீச்சில் குணமாக்கும் நூல்
பதிப்பாசிரியர் : தி. சஜந்தன் பதிப்புரிமை : பதிப்பாசிரியருக்கு வெளியீடு : நற்பவி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் Website : natpavi.com Email : natpavibookshop@gmail.com பக்கங்கள் : 375 விலை : Rs.2499/-
இந்த நூலிலிருந்து எந்தவொரு பகுதியையும், ஆசிரியரின் எழுத்து பூர்வ சம்மதமின்றி நகல் எடுத்தலோ, அச்சடித்தலோ, பகுதி வாரியாகத் துண்டு பிரசுரங்களாகப் பிரசுரித்தலோ, பதிப்புரிமைச் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது.
சமர்ப்பணம்
பிறப்பால் அல்லாமல்,
திட்டமிட்டு செல்வந்தராக உருவாக
விரும்பும் ஒவ்வொருவருக்கும்.
வறுமை என்பது ஒரு நோய். பணமே இந்நோய்க்கான ஒரே மருந்து. மனமே மருந்தை உருவாக்கும் பட்டறை. எண்ணங்களே மருந்துக்கான மூலப் பொருட்கள். ஆகவே, எதைச் சிந்திக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த பின், எண்ணத் தொடங்குவதே, திட்டமிட்டுச் செல்வந்தராக உருவாவதற்கான அறிவியல் பூர்வ தொழில்நுட்ப இரகசியம்.
ஆதாரம்: எண்ணித் துணிக கருமம்- துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள். கருமம் என்றால் செயல். எண்ணமிடலும் ஒரு கருமமே. ஆகவே, செயலுக்கு முன் சிந்திக்கவும் என்றால், எண்ணமிடும் முன் சிந்திக்கவும் என்றே பொருள்.