fbpx

How to find a partner

பொருத்தமான இணையைத் தேர்வு செய்ய, சில விதிகள் உள்ளன.

 

அவற்றைப் பின்பற்றி உங்களுக்குப் பொருத்தமான இணையைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான், நீங்கள் நினைக்கும் வேகத்தில் உங்களால் செல்வந்தராக உருவாக முடியும்.

 

பலருக்குத் தெரியாத இரகசியத்தைச் சொல்கிறேன். கல்யாணத் தரகர் வேலையைக் கடவுள் செய்கிறார்.

 

கடவுள் தான் உலகிலேயே நேர்மையான தரகர்.

 

தரகுக்காக, பொருந்தாத இருவரைச் சேர்த்து வைக்காத தரகர் கடவுள்.

 

அது தவிர, உங்களைப் பற்றியும், உங்கள் இணையைப் பற்றியும், நீங்கள் இருவரும் அறிந்திருப்பதை விட, அதிகமாக அறிந்துள்ள ஒரே தரகர் கடவுள்.

 

கடவுள் சிபாரிசு செய்யும் நபரை விசாரிக்காமல் மணம் முடிக்கலாம்.

 

ஆனால், பெரும்பாலானவர்கள் இந்தத் தரகரைப் பயன்படுத்திக் கொள்வதே இல்லை. கடவுளை வணங்குகிறார்கள். ஆனால் அவர் வகுத்துள்ள விதிகளைப் பெரும்பாலான மக்கள் பின்பற்றுவதில்லை. கடவுள் என்றால் பிரபஞ்சம் என்று பொருள்.

 

தங்கள் மண வாழ்வில், சரியான ஜோடியை அமர்த்த அனைவரும் விரும்புகிறார்கள். அதன்பொருட்டு, எதிர்பாலினத்தைச் சேர்ந்த பலரைப் பார்க்கிறார்கள். ஆனால், இறுதியில் தங்களுக்கு பொருத்தமற்ற நபரையே தங்கள் ஜோடியாகத் தேர்வு செய்கிறார்கள்.

 

ஏனெனில், தங்களுக்கான ஜோடியைத் தேர்வு செய்யும் போது பெரும்பாலான மக்கள் அறிவைப் பயன்படுத்துவது இல்லை.

 

அறிவை பயன்படுத்தாத போது, மனதின் தலைமைப் பொறுப்பை உணர்ச்சி ஏற்கிறது. உணர்ச்சி எடுக்கும் முடிவுகள் அனைத்துமே முட்டாள்தனமானவை. இதில் விதிவிலக்கே கிடையாது.

 

உதாரணமாக அழகுக்கு அல்லது வரதட்சணைக்கு அல்லது சம்பளக் கவருக்கு அல்லது வாரிசுரிமையின் கீழ் வரப் போகும் சொத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது உணர்ச்சி.

 

இந்த உணர்ச்சியின் அடிப்படையில் இணையைத் தேர்வு செய்யும் போது, நிம்மதியான தம்பதியாக வாழத் தேவைப் படுகின்ற சில பொருத்தங்களை மக்கள் தியாகம் செய்து விடுகிறார்கள்.

 

அதேபோல, பரிதாப உணர்ச்சியின் அடிப்படையில் சிலர் இணையைத் தேர்வு செய்கிறார்கள். பரிதாப உணர்ச்சியால் மனமிறங்கி தங்கள் இணையைத் தேர்வு செய்த பலர், பிறர் பார்த்து பரிதாபப் படும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்ததாக மக்கள் அவசரப் படுகிறார்கள். திருமண முடிவை வேகமாக எடுக்கிறார்கள். ஆயுள் முழுவதும் ஒன்றாய் இணைந்து வாழப்போகின்ற நபரைத் தேர்வு செய்யும் போது அவசரம் ஆகாது. இறுதி முடிவெடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது தேவை. ஆனால், மக்கள் அவசரப் படுகிறார்கள்.

 

கல்லூரியில் சேர்ந்த ஒரே மாதத்தில் தன் சக மாணவரில் ஒருவரைத் தன் இணையாகத் தேர்வு செய்து விடுகிறார்கள்.

 

அவசர மனதில் அறிவு வேலை செய்யாது. அவசரம், ஆத்திரம், பரபரப்பு ஆகிய மூன்றும் அறிவைக் குருடாக்கும் உணர்ச்சிகள். அந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் போது, பொருத்தமற்ற இருவர் தம்பதியாகி விடுகிறார்கள்.

 

அதனால் தான் திருமணமான இரண்டு மூன்றாண்டுகளில் பிரிவு நேர்கிறது. சேர்ந்து வாழ்வோரும் ஒரே கட்டிலில் படுத்துறங்கும் பரம விரோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

திருமண இணையைத் தேர்வு செய்யும் விசயத்தில் பிரபஞ்ச விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

 

இப்போது நான் பகிர்ந்து கொள்ளும் பிரபஞ்ச விதிகளைத் தவறாமல் நீங்கள் பின்பற்றினால், உணவகத்துச் சென்று ஆர்டர் செய்து நீங்கள் விரும்பும் உணவைப் பெறுவதைப் போலவே, நீங்கள் விரும்பும் குணநலன் கொண்ட கூட்டாளரை நீங்கள் ஈர்த்துக் கொள்ளலாம்.

 

அதன் முதல் விதி இவ்வாறு கூறுகிறது.

 

உங்கள் இலட்சியக் கூட்டாளரைப் பிரபஞ்சம் வழங்க வேண்டுமானால், எந்த வகையான நபரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், இருக்க வேண்டும்.

 

இணையிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

 

அவருடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும்?

 

அவருடைய பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்?

 

அவருக்கு சகோதர சகோதரியர் இருக்க வேண்டுமா?

 

அவர் எந்த அளவுக்கு படித்தவராக இருக்க வேண்டும்?

 

அவர் வசிப்பிடம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

 

அவர் எந்த அளவுக்கு சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்?

 

அவர் எந்த அளவுக்கு அன்பானவராக இருக்க வேண்டும்?

 

அவர் எத்தகைய நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டும்?

 

அவர் எப்படிப்பட்ட ஆளுமை மிக்கவராக இருக்க வேண்டும்?

 

அவர் எந்த அளவுக்கு ஒழுக்கமானவராக இருக்க வேண்டும்?

 

அவர் எந்த அளவுக்கு நேர்மையானவராக இருக்க வேண்டும்?

 

அவர் எந்த அளவுக்கு சொத்துடையவராக இருக்க வேண்டும்?

 

அவரால் பெறக்கூடிய புதிய உறவுகள் எப்படி இருக்க வேண்டும்?

 

அவர் எத்தகைய சமூக மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும்?

 

விடைகளை ஒரு தாளில் எழுதுங்கள். இவை தவிர, இன்னும் இதுபோல் உங்கள் மனதில் உள்ள இணையைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தெளிவாக ஒரு தாளில் எழுதுங்கள்.

 

உங்கள் விருப்பத்தை ஒரு தாளில் தெளிவாக எழுதுவதன் மூலம், பிரபஞ்சத்தின் எழுதுகோல் விதியை நீங்கள் இயக்குகிறீர்கள்.

 

எழுது கோல் விதி சொல்வது என்னவெனில், உங்கள் விருப்பத்தை, நீங்கள் ஒரு தாளில் எழுதும் போது தான், நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது பிரபஞ்சத்துத் துல்லியமாகப் புரியும்.

 

அந்தத் துல்லியம் கிடைத்து விட்டால் போதும். உங்கள் விருப்பம் எதுவாக இருப்பினும், அதை நிறைவேற்றும் பணியில் உடனடியாகப் பிரபஞ்சம் இறங்கி விடும். இதன் பெயர் எழுதுகோல் விதி.

 

உலகிலேயே மிகவும் நேர்மையான தரகுக் கூலி வாங்காத ஒரே கல்யாணத் தரகர் பிரபஞ்சம் என்று சொன்னேன். ஆனால், தெளிவான தகவலைப் தராவிட்டால் தரகர் வேலையை அது பார்க்காது.

 

ஆகவே எத்தகைய இணையைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக ஒரு தாளில் எழுதுங்கள்.

 

நீங்கள் எழுதியவற்றை அவ்வப்போது படியுங்கள். அதில், உங்கள் இணையின் குணம் குறித்து நீங்கள் என்ன எழுதியுள்ளீர்களோ, அத்தகைய குணநலன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். ஆகவே உங்களால் ஈர்க்கப்படும் நபர்கள் உங்களைப் போன்றே இருப்பார்கள். அவர்களில் சிறந்தவரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

அடுத்ததாக, பிரபஞ்சம் உங்களுக்கு உதவ வேண்டுமானால், நீங்கள் செயல்பட வேண்டும். முடங்கிக் கிடப்போருக்கு உதவ கடவுளால் முடியாது. நீங்கள் பலரைச் சந்திக்க வேண்டும். அவர்கள் முன் உங்கள் குணநலன்களை வெளிப்படுத்த வேண்டும்.

 

ஒவ்வொரு நாளும் உங்கள் கூட்டாளரைச் சந்திக்கும் வாய்ப்புடைய நாளாகவே இருக்கும், ஆகையால், நீங்கள் எப்போதும் சுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும், இருப்பதை உறுதி செய்யுங்கள்.

 

நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும் எண்ணங்களை மட்டுமே சிந்தியுங்கள். மனதில் வலியை உருவாக்கும் சிந்தனையை தொடர்ந்து சிந்திக்காதீர்கள். உங்கள் உடலும் முகமும் கவர்ச்சிகரமாக இருக்க, தன்னம்பிக்கையோடு புன்னகை புரியுங்கள்.

 

தன்னம்பிக்கை மிக்க புன் முறுவல் அலங்கரிப்பதற்கு இணையாக உங்களை அலங்கரிக்கூடிய ஒரு அழகு நிலையம் உலகில் இல்லை. ஆகவே, புன்முறுவலை உங்கள் முகத்தின் முகவரியாக்குங்கள்.

 

உங்களை நீங்களே ரசிக்கும் வகையில் நீங்கள் இயங்கும் போது தான் பிறரால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள். பிறரால் நீங்கள் கவனிக்கப் படும் போது தான், உங்கள் குணநலன்களும், நேர்மறையான அதிர்வும், ஆற்றலும் பிறரைச் சென்றடையும்.

 

அவ்வாறு செல்லும் போது, உங்களைக் கவனிப்பவர்களில் உங்களுக்குப் பொருத்தமானவராக இருப்பவர், உங்களால் ஈர்க்கப் படுவார். அவரால் நீங்களும் ஈர்க்கப் படுவீர்கள்.

 

ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். அவ்வாறு ஒத்தவரால் நீங்கள் ஈர்க்கப்படும் போது, அந்த ஈர்ப்பில் மயங்கி, உடனே விழுந்து விடாதீர்கள். ஏனெனில், உங்களை ஈர்க்கும் திறன் கொண்ட எதிர்ப் பாலின மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

 

அவர்களில் பலரை நீங்கள் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் ஒவ்வொரு நபரையும், உங்கள் மனதுக்குள் அடையாளம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தான், உங்கள் சுயம்வரத்தின் பங்கேற்பாளர்கள். அவர்களில் ஒருவரைத் தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

 

இந்த தேர்வில், மூன்று விதிகள் உள்ளன.

 

1. சமூக குழுக்களில் அல்லது கல்லூரி வளாகங்களில், உங்களை யாரேனும் நிராகரித்தால் அதைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு நபரிடம் சிக்கிக் கொள்ளாமல், உங்களைக் காக்கும் பொருட்டே, நீங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

2. நீங்கள் விரும்பும் வகையிலான நபர் உங்கள் பார்வையிலேயே படாவிடினும், நீங்கள் மனம் தளரக் கூடாது. நிச்சயம் வருவார். அவ்வளவு தான். ஆகவே, “வரும் போது வரட்டும்” என்று பட்டும் படாத வகையில் தான் நீங்கள் இருக்க வேண்டும்.

 

3. அவசரப் படக் கூடாது. மூன்று மாதமாக எதிர்பார்க்கிறேன். இன்னும் எதிர்ப் படவில்லையே என்று ஏங்கக் கூடாது. கால தாமதத்துக்குப் பின்னால், ஒரு இரகசியம் மறைந்திருக்கலாம்.

 

பிரபஞ்சம் உங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டுமானால், நீங்கள் பிரபஞ்சத்தை நம்ப வேண்டும். நம்பினால் மந்திரம் வேலை செய்யும். அதாவது, என் லட்சியக் கூட்டாளரை பிரபஞ்சம் அடையாளம் காட்டியே தீரும் என்று நம்புங்கள். அது நடக்கும்.

 

வாழ்க்கை சிறப்பாக இருக்க, தம்பதிக்கிடையே மூன்று பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த மூன்று பொருத்தங்களும் இருந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம். மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும், வாழ்க்கை நரகமே.

 

முதல் பொருத்தம். உடல் ஈர்ப்பு. உங்கள் இணையை நீங்கள் பார்க்கும் போதும் சரி. உங்கள் இணை உங்களைப் பார்க்கும் போதும் சரி. காதல் உணர்வு பொங்கியெழ வேண்டும். உடல் ஈர்ப்பு தான், மண வாழ்வின் ஜீவன். அது இல்லையா? மேற்கொண்டு பேச எதுவுமில்லை. உங்கள் இருவரிடையே, அறவே பொருத்தம் இல்லை.

 

ஏனெனில், நீங்கள் ஒரு நண்பரைத் தேடவில்லை. இரவில் பாலுறவு கொள்வதற்கான இணையைத் தேடுகிறீர்கள். ஆகவே, உங்கள் இணையைப் பார்த்தால் உங்களுக்கும், உங்களைப் பார்த்தால் உங்கள் இணைக்கும், காதல் உணர்வு பொங்கியெழ வேண்டும்.

 

இந்த பொருத்தம் இல்லாமல், ஜாதகப் பொருத்தம், அந்தஸ்து பொருத்தம், பணப் பொருத்தம், ஜாதிப் பொருத்தம், ஜோடிப் பொருத்தம், கல்விப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை நரகமாகி விடும். ஆகவே முதல் பொருத்தம் உடல் ஈர்ப்பு.

 

இரண்டாவது பொருத்தம் ஒத்திசைவு. அதாவது நீங்கள் பார்த்த ஒருவரிடம் உடல் ஈர்ப்பு இருக்கிறது. உடனே தேர்வு செய்யக் கூடாது. இருவரையும் இணைக்கும் ஒத்திசைவுகளைக் கவனிக்க வேண்டும். இருவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வுகள் தானாக நிகழ வேண்டும்.

 

உங்கள் இருவருக்குள்ளும் இயற்கையான பொருத்தம் இருந்தால் உங்களுக்கிடையே திட்டமிடாத தற்செயலான சந்திப்புகள் நிகழ்ந்தே தீரும். அதாவது, உங்களுக்குப் பொருத்தமான நபரை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தக்கூடிய ஒரு சக்தி பிரபஞ்சத்தில் இருக்கிறது.

 

காரண காரியத்தோடு இயங்கும் சக்தி அது. உங்களைப் பற்றியும் உங்களுக்குப் பொருத்தமான இணையைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ள சக்தி அது.

 

உங்களுக்கு உதவ அந்தப் பிரபஞ்ச சக்தியை அனுமதிக்கவும்.

 

ஆறு மாதம் அவகாசம். அதற்குள் தற்செயலான சந்திப்பு எதுவும் உங்களுக்குள் நிகழா விட்டால், அந்த நபர் உங்களுக்காகப் பிறந்தவர் அல்ல. அவர் வேண்டாம்.

 

இதை மீறுவது விதிக்கு எதிரானது. விதியை மீறினால், உங்கள் சக்தியும் நேரமும் வீணாவதைத் தவிர, வாழ்வில் எந்த முன்னேற்றமும் இருக்காது. விதிக்கு எதிராகப் போராடி வென்றவர் இல்லை.

 

மூன்றாவது பொருத்தம். எண்ண அலைகளின் அதிர்வு. உங்கள் இணையின் எண்ண அலைகளின் அதிர்வுகள், உங்கள் அதிர்வுகளுடன் இணக்கமானவையாக இருக்க வேண்டும். ஒத்திருக்க வேண்டும்.

 

அதாவது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் போது, அந்த நிகழ்வு குறித்து மனதில் எண்ணங்கள் எழுவது இயல்பு. அந்த எண்ணங்களால் உணர்ச்சிகள் எழுவதும் இயல்பு.

 

அவ்வாறு இருவர் மனதிலும் உருவாகும் உணர்ச்சிகள் முரண் பட்டவையாக இருந்தால், வாழ்க்கை முழுவதும் உங்கள் இருவரிடையே மோதல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

 

அதனால், உங்கள் வாழ்க்கை போர்க்களமாகவே இருக்கும். கொலை, தற்கொலை போன்றவை நிகழக் கூடிய ஆபத்து உண்டு. உதாரணமாக, காதலிக்கும் போதே சண்டையிட்டுக் கொள்ளும் காதலர்கள், கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

 

அவர்களுடைய எண்ண அதிர்வுகள் இணக்கமாக இல்லை. அதன் அறிகுறி தான் சண்டை. இதை மீறித் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் விவகாரத்தில் தான் முடியும்.

 

ஓரிரு வருடங்களில், அல்லது அவர்கள் குழந்தைக்கு மூன்று வயது ஆவதற்குள் விவாகரத்துக்கு விண்ணப்பிப்பார்கள்.

 

விவாகரத்து நிகழாவிட்டால், இருவரில் ஒருவர் அகாலமாகச் செத்துப் போவார். சாகும் முடிவை ஆண் தான் வேகமாக எடுப்பான். 40 முதல் 55 வயதுக்குள் அந்த முடிவை ஆண் எடுப்பான்.

 

ஆதாரங்கள் எக்கச் சக்கமாக உள்ளன. ஆனால், பெயர் சொல்ல முடியாது. தற்கொலை வாயிலாகச் செத்துப் போன பிரபலங்களின் பட்டியலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

எண்ண அதிர்வுகளுக்கு இடையே நிகழும் தொடர்ச்சியான போரால், விபத்தாலும் மரணம் நேரலாம்.

 

மடியாமல் தப்பித்துக் கொள்பவன் நடைப்பிணமாக வாழ்ந்து மடிவான். அல்லது ஒரு மண்புழு போல் வாழ்ந்து மடிவான்.

 

இது ஜோசியம் அல்ல. பிரபஞ்ச ரகசியம். ஆகவே திருமணம் வேண்டாம்.

 

ஆனால், ஒரு பெண்ணைக் காதலித்த பின்பு, அவளைப் பிரிந்து செல்ல ஆணுக்கு உரிமை இல்லை.

 

ஆனால், காதலித்துப் பார்த்துத் தனக்கான இணையைப் பெண் தேர்வு செய்யலாம். இது இன்றைய நிலைமை.

 

காதலித்த ஆணைக் கைவிடாதே” என்று சொல்ல முடியாது. ஏனெனில், அவன் ஒரு “ஒருதலைக் காதலன்” என்று கூறிக் காதலனை உதறி விடப் பெண்ணுக்கு வாய்ப்புண்டு.

 

காதல் முறிவை அறிவிக்கும் உரிமை பெண்டிருக்கு மட்டுமே உண்டு. காதலில் விழுந்த ஆணுக்கு அந்தக் காதலிலிருந்து வெளியேறும் உரிமை சட்ட பூர்வமாக இல்லை

 

பெண்ணாக விரட்டி விட்டால் ஒழிய, காதல் உறவிலிருந்து ஆடவனால் வெளியேற முடியாது.

 

முயன்றால், அவன் சிறை செல்ல நேரும்.

 

பெண்ணுக்குரிய பாதுகாப்பு சட்டங்கள் கடுமையானவை.

 

அதனால், மனைவியைக் கை விடுவதை விடக் காதலியைக் கை விடுவது ஆபத்தானது.

 

காதலியிடமே வரதட்சிணை கேட்கிறான் என்று தண்டிக்கப் படலாம். ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணை ஆசை வார்த்தை கூறிக் கற்பழித்து விட்டுக் கைவிடப் பார்க்கிறான் என்று தண்டிக்கப் படலாம். குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கெடுத்து விட்டான் என்று தண்டிக்கப் படலாம்.

 

காதலிக்கிறேன் என்கிற பெயரில் பழகி, மயக்கி என் ஐந்து பவுன் தங்க சங்கிலியை அபகரித்துக் கொண்டான் என்கிற தலைப்பிலும் ஆணைத் தண்டிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கு உண்டு.

 

காதலிப்பது போல் நடித்துப் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துப் படம் பிடித்து வலைத் தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிக் காசு பறிக்கிறான். இது வரை 247 பேரை இவன் ஏமாற்றியிருக்கிறான் என்று புகார் கொடுத்து மொத்தமாக முடித்துக் கட்டவும் வாய்ப்பு உண்டு. சி.ஐ.டி விசாரணைக்கே கூட வாய்ப்பு உண்டு.

 

22 வயதுக்குள் 257 பெண்களுடன் பழகிய அந்தக் காமுகனோடு எதற்காகப் பண்ணை வீட்டுக்கு நீ சென்றாய் என்றெல்லாம் கேட்க முடியாது. மேலும், 22 வயதுப் பையன் 257 பெண்களுடன் பழகுவது சாத்தியமா என்று கேட்க பத்திரிகைகளும் விடாது. மேற்கண்டவை தவிர, இங்கே சொல்ல முடியாத வாய்ப்புக்களும் பெண்ணுக்கு உள்ளன.

 

காதலித்த பெண்ணிடமிருந்து விடுதலை பெறுவது சுலபமல்ல.

 

ஒரு தம்பதியிடம் அவர்கள் திருமணம் குறித்துத் தனித் தனியாக விசாரிக்கப் பட்டது. “காதல் திருமணம்” என்று மனைவி சொல்கிறார். ஆனால், “கட்டாயத் திருமணம்” என்று கணவர் சொல்கிறார்.

 

ஏனிந்த முரணெனக் கேட்டால், “காதலித்த போதே இவள் குணமறிந்து தப்பிக்க நினைத்தேன். ஆனால், கை விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி என்னைக் கல்யாணம் செய்து விட்டாள் ” என்கிறார் கணவர்.

 

காதல் திருமணங்களில் பெரும்பாலானவை இது போன்ற கட்டாயத் திருமணங்களே. அதனால் தான் பெரும்பாலான காதல் திருமணங்கள் வில்லங்கமாகவே முடிகின்றன.

 

ஆகவே, காதலிக்கும் போது சண்டையிட்டுக் கொள்பவர்கள், மருத்துவர் ஷாலினி(india) போன்ற உளவியல் நிபுணர் ஒருவரை அணுகி, உங்கள் எண்ண அதிர்வுகளுக்கு இடையே உள்ள முரண்பாட்டைக் கூறி பரஸ்பரப் பகையின்றிப் பிரிய முயற்சிக்கவும்.

 

அவசியமெனில் இழப்பீடு கொடுத்தும் பிரியலாம்.

 

பணம் போகிறதே” என்று இன்று பதறினால், “உயிர் போகிறதே” என்று நாளை கதற வேண்டி இருக்கும்.

 

காதலிக்கும் போது சண்டையிடும் உறவு, எதுவாயிருப்பினும், கொடுத்தேனும் விட வேண்டிய உறவது.

 

இந்த ஆலோசனையை மீறினால் வாழ்க்கை போராகவே இருக்கும். அவர் கல்வியாளர். காதலிக்கும் போதே சண்டையிட்டுக் கொண்டிருந்த காதலியையே திருமணம் செய்து கொண்டார். உறவினர் வடிவில் எச்சரித்த பிரபஞ்சத்தை அவர் சட்டை செய்யவில்லை. பிறகு பொருள் ஈட்டினார். புகழடைந்தார். எனினும், இப்போது அவர் உயிரோடு இல்லை. தன் 45 –ல் ஒரு முழக் கயிறில் செத்துப் போனார்.

 

உங்கள் எண்ண அதிர்வுகளோடு ஒத்த எண்ண அதிர்வுகள் இல்லாத நபரைத் தேர்வு செய்யக் கூடாது.

 

எண்ண அதிர்வுகள் தான் ஆழ் மனதைக் காட்டும் கண்ணாடி. இணையைத் தேர்வு செய்வதில் உள்ள விதிகளில் முதல் விதியான உடல் ஈர்ப்பைப் பலரிடம் உங்களால் உணர முடியும்.

 

இளமைப் பருவம் காமத்துக்காக ஏங்கும் பருவம். அந்த ஏக்கம் ஆழ் மன அளவில் வெளியில் தெரியாத வெறியாக மாறும் இயல்புடையது. அவ்வாறு அது மாறும் போது, அறிவுக் கண்ணின் பார்வையை அது பறித்து விடும். அந்தச் சூழலில், எவரைப் பார்த்தாலும், உடல் ஈர்ப்பு இருப்பதைப் போலவே தான் தோன்றும்.

 

ஆகவே மூன்று விதிகளில், முதல் விதி பொருந்தி விட்டதாகக் கருதி நீங்கள் ஏமாந்து போக வாய்ப்புண்டு.

 

அதே போல், காமம் தலை தூக்கி இருக்கையில் உடல் ஈர்ப்பு உடையவர் என்று நீங்கள் உணரும் இணையை மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் மனதில் எழும்.

 

அந்த உந்துதலால் நீங்களே முயற்சி செய்து சந்தித்து விட்டு, அந்தச் சந்திப்பையே தானாக நிகழ்ந்த சந்திப்பாகக் கருத வாய்ப்புண்டு.

 

ஆகவே, உங்கள் இருவருக்குள்ளும் பிரபஞ்ச விருப்பத்தின் பேரிலான ஒத்திசைவு இல்லாவிட்டாலும் கூட, பிரபஞ்ச சக்தியால் தான் சந்திப்பு நிகழ்ந்ததாக எண்ணி இரண்டாம் விதியிலும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

 

ஆனால், உங்கள் எண்ண அதிர்வுகளுக்கிடையில் சீரமைவு என்கிற மூன்றாம் பொருத்தம் இல்லையென்றால், அது இருப்பதைப் போன்ற ஒரு கருத்தை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியாது.

 

உங்கள் இருவருடைய ஆழ்மனங்களின் பண்பு எப்படியும் வெளிப்பட்டே தீரும். அதனால் எண்ண அதிர்வுகளுக்கிடையே முரண் இருந்தால், அது உங்கள் பார்வைக்கு வந்தே தீரும்.

 

மனம் மணம் வீசியே தீரும். அம்மணத்தை மறைக்க முடியாது.

 

இதில் சப்பைக் கட்டு கட்ட வாய்ப்பில்லை.

 

ஒவ்வொரு நபரிடமும் மனம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி அந்த மனம் நினைப்பதும் உணர்வதும், உங்கள் மனம் நினைக்கிற மாதிரியே உணர்கிற மாதிரியே இருக்கும் போது தான், உங்களுக்குள் அதிர்வுப் பொருத்தம் இருக்கும். இல்லையேல் உங்களுக்குத் தெரிந்து விடும். யாரும் யாரையும் இதில் ஏமாற்ற முடியாது.

 

1. உடல் ஈர்ப்பு. 2. ஒத்திசைவு. 3. எண்ண அதிர்வுகள் ஆகிய மூன்றிலும் அளவுகள் உள்ளன. அதிகமான அளவே நல்லது.

 

அனைத்திலும் நூற்றுக்கு நூறு பொருந்தத் தேவையில்லை. மேலும், நூற்றுக்கு நூறு சாத்தியமற்றது. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்.

 

உடலீர்ப்பில் 75% இருந்தால் போதும். ஒத்திசைவிலும் 75% இருந்தால் போதும். அதற்கு குறைவாக இருந்தால் ஆபத்து.

 

எண்ண அதிர்வுகளின் சீரமைவும் 75% இருந்தால் நல்லதே. எனினும், வெவ்வேறு சூழலில் வளர்ந்த இருவரிடையே அத்தகைய எண்ணச் சீரமைவு இருக்க வாய்ப்பில்லை. ஆகவே, 50% அளவிலான எண்ணச் சீரமைவு கூடப் போதுமானது.

 

அதாவது பத்து விசயங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களில் ஐந்து விசயங்களைப் பற்றியாவது இருவருக்கும் இடையே ஒத்த கருத்து இருந்தால் தேர்வு செய்யலாம். உதாரணமாக, பத்து விசயங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

 

1. ஒருவருக்கு இட்லி பிடிக்கும் மற்றவருக்கு சப்பாத்தி தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு தோசை பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

2. ஒருவருக்கு அமெரிக்கா பிடிக்கும். மற்றவருக்கு சீனா தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு இங்கிலாந்தைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

3. ஒருவருக்கு மோடியைப் பிடிக்கும். மற்றவருக்கு ராகுலைத் தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு ட்ரம்பைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

4. ஒருவருக்கு சிக்கன் பிடிக்கும் மற்றவருக்கு சைவம் தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு மட்டன் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

5. ஒருவருக்கு சிவப்பு நிறம் பிடிக்கும். மற்றவருக்கு பச்சை தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு ரோஸ் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

6. ஒருவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். மற்றவருக்கு சீரியல் தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு பேட்மிட்டன் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

7.ஒருவருக்கு கூட்டுக் குடும்பம் பிடிக்கும். மற்றவருக்கு தனிமை பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு குழுவாக பிக்னிக் செல்தல், குழுவாக விளையாடுதல் போன்றவை பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

8. ஒருவருக்கு பகல் நேர செக்ஸ் பிடிக்கும். மற்றவருக்கு இரவு தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு பகல் நேர காதல் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

9. ஒருவருக்கு மாரியம்மனைப் பிடிக்கும் மற்றவருக்கு மேரி மாதாவைத் தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு காளி, பகவதியம்மன், சாமுண்டீஸ்வரி, மாகாளியம்மனைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

10. ஒருவருக்கு தமிழ் மொழி பிடிக்கும். மற்றவருக்கு ஹிந்தி தான் பிடிக்கும். இதில் சீரமைவு இல்லை. மற்றவருக்கு தெலுங்கு மலையாளம் போன்ற திராவிட மொழி பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் கூட, சீரமைவு இருப்பதாக கூறலாம்.

 

மேற்கண்ட பத்தில் ஐந்து விசயங்களைப் பற்றியாவது இருவருக்கும் இடையே ஒத்த கருத்து இருந்தால் தேர்வு செய்யலாம். இந்த உதாரணம் பின்பற்றப் படுவதற்கு அல்ல. புரிந்து கொள்வதற்காக.

 

2 × 2 = 4 தான் பெருக்கல் கணக்கு என்கிறேன். இதுவே எல்லா பெருக்கல் கணக்குகளையும் சொல்லி விட்டதாகப் பொருள் அல்ல.

 

உங்கள் மனதில் உள்ள முக்கியமான பத்து விசயங்களை எழுதி அதில் ஐந்திலாவது பொருந்திப் போகும் நபரைத் தேர்வு செய்யுங்கள்.

 

மூன்றிலும் 75 சதவீதம் தேவை. ஆகவே, எண்ணச் சீரமைவில் 50% மட்டுமே உள்ள நபரைத் தேர்வு செய்யும் போது, பற்றாக்குறையாக உள்ள 25 சதவீதத்தை ஈடுகட்ட வேறு சில திறன்களைப் பார்க்க வேண்டும்.

 

ஒன்று அவருடைய புரிதல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். அல்லது அவருக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். அல்லது தன் ஆன்ம வளர்ச்சி குறித்த அக்கறை இருக்க வேண்டும். மேற்கண்ட மூன்றில் ஒன்று இருந்தால், 50% மட்டுமே எண்ணச் சீரமைவு உடைய நபரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

புரிதல் திறன் மிக்கவர் புத்திசாலி.

 

சூழலுக்கு ஏற்ப எளிதில் அவர் மாறி விடுவார்.

 

இருவரும் ஒரே மாதிரியான எண்ண அதிர்வுகளை உருவாக்கும் போது நல்ல விசயங்கள் ராக்கெட் வேகத்தில் வாழ்வில் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டவுடன் இணக்கமான எண்ண அதிர்வுகளை அவர் உருவாக்கத் தயாராகி விடுவார்.

 

ஆகவே புரிந்து கொள்ளும் திறனுடைய நபர் உங்களுடைய எண்ணச் சீரமைவுக்குள் விரைவில் வந்து விடுவார். அல்லது தன் எண்ணச் சீரமைவுக்குள் உங்களைக் கொண்டு சென்று விடுவார். இரண்டில் எது நிகழ்ந்தாலும், இருவரும் ஒருவருக்காகவே மற்றவர் பிறந்த மாதிரி ஆகி விடுவீர்கள்.

 

அதேபோல், தங்கள் வாழ்வில் தெளிவான இலக்கு உள்ளவர், தன் இலக்கை அடைவதில் காட்டும் அக்கறையை, உங்கள் இலக்கை நீங்கள் அடைவதிலும் காட்டுவார். ஆகவே இருவருக்கும் இடையே எளிதில் எண்ணச் சீரமைவு ஏற்பட்டு விடும்.

 

அதேபோல், தன் ஆன்ம வளர்ச்சி குறித்த சிந்தனையுடைய வரையும் ஒத்த எண்ண ஓட்டத்துக்குள் கொண்டு வந்து விடலாம். அவரிடம் உள்ள ஆன்மீக சிந்தனையைக் கொண்டே பிரபஞ்ச விதிகளைப் பற்றி எடுத்து கூறி, உங்களுடைய எண்ணச் சீரமைவுக்குள் அவரைக் கொண்டு வந்து விடலாம்.

 

ஆனால், புரிதல் திறனோ, தெளிவான இலக்கோ அல்லது தன் ஆன்ம வளர்ச்சி குறித்த சிந்தனையோ இல்லாத நபரிடம் இருந்து நீங்கள் கண்டிப்பாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

 

புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பவர், உங்கள் ஒவ்வொரு செயலையும், வார்த்தையையும் தவறாகவே புரிந்து கொண்டு, உங்களைச் சித்ரவதை செய்வார். ஆகவே புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பவர் உங்களுக்குப் பொருத்தமற்றவர்.

 

அதேபோல், வாழ்வில் குறிப்பான இலக்கு எதுவும் இல்லாதவரின் எண்ணங்கள் ஒரு கட்டமைப்புக்குள் இருக்காது. ஆகவே எந்த நேரத்தில் அவர் எப்படிச் செயல்படுவார் என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியாது, அதனால் வாழ்க்கை முழுவதும் மோதல் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே, இலக்கற்றவர் உங்களுக்குப் பொருத்தமற்றவர்.

 

அதேபோல், ஆன்ம சிந்தனையற்றவருடனும் உங்களால் நிம்மதியாக வாழ முடியாது. தன் ஆன்மாவைப் பற்றியே கவலைப்படாத நபர், உங்களைப் பற்றிக் கடுகளவும் கவலைப் பட மாட்டார்.

 

ஆகவே, புரிதல் திறன், அல்லது தனக்கென ஒரு இலக்கு, அல்லது ஆன்ம சிந்தனை ஆகிய மூன்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். ஒன்று கூட இல்லாத நபரை நீங்கள் தேர்வு செய்யக் கூடாது. மீறித் தேர்வு செய்தால், அவர் இருப்பே உங்களைச் சித்ரவதை செய்யும்.

 

அவர் பிறப்பியல்பின் படி தான் அவர் இருப்பார். ஆனால், அவர் இயல்பைப் பார்த்தாலே உங்களுக்கு பற்றிக் கொண்டு வரும். அதனால் நீங்கள் அவரைத் துன்புறுத்துவீர்கள். பதிலுக்கு அவர் உங்களைப் பெருமளவில் துன்புறுத்துவார். அதனால் நீங்கள் இருவருமே திரு மணத்தால் பாதிக்கப்பட்டவர் என்கிற வலைக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.

 

இதனால் வாழ்க்கை போர்க்களமாகும். துவக்க காலக் காதல் காணாமல் போகும். காணாமல் போன காதலைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது. புதிதாக உருவாக்க வேண்டும். அதற்கு தாம்பத்யம் அவசியம். அதையும் தந்த்ரா வழியில் மேற்கொள்வது அவசியம்.

 

ஆனால், அவர் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அல்லது அவா விரும்பும் போது நீங்கள் ஒத்துழைக்க மாட்டீர்கள். அதனால், அன்பே இல்லாத பாலையாய் வாழ்க்கை மாறி விடும்.

 

காலை எழுந்ததும் தன் மனைவியின் முகத்தில் விழித்தாலே, அன்றைய தினம் முழுவதும் பீடை பிடித்து ஆட்டுவதாக ஒரு கணவர் கூறுகிறார். அதேபோல், தங்கள் கணவனைக் கண்டாலே பற்றிக் கொண்டு வருகிறது என்று பல பெண்கள் சொல்கிறார்கள்.

 

தம்பதியரின் சிந்தனை அதிர்வுகள் ஒத்ததாக இருக்கும் போது, அவர்கள் வீடே வெளிச்சமாக இருக்கும். அதனால் அவர்கள் வாழ்க்கை அந்த அதிர்வுகள் மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும். அதனால் நல்லவற்றை மட்டுமே ஈர்க்கும் காந்தமாக இருக்கும்.

 

ஒருவர் மற்றவரின் அதிர்ஸ்ட நட்சத்திரமாக இருப்பார்கள். ஒருவர் முகத்தில் மற்றவர் விழித்து விட்டுப் போனாலே வெற்றியைத் தான் ஈர்த்து வருவார்கள். ஒருவரை மற்றவர் குறை கூறும் பேச்சுக்கே, அங்கே இடம் இருக்காது. அதனால், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தக் கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

 

அன்பிருக்கும் இடத்தில் அச்சம் இருக்காது. அச்சமில்லா வாழ்வில் ஒருவரை மற்றவர் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் இருக்காது. அந்த நோக்கம் இல்லாத இடத்தில் சூழ்ச்சி இருக்காது. சூழ்ச்சியில்லா வாழ்வில் பாலின்பப் பஞ்சமிருக்காது.

 

சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, ஏராளமாகப் பாலுறவு கொள்வோர் வாழ்வில் அன்புக்குப் பஞ்சமிருக்காது. ஏனெனில் பாலுறவில் ஈடு படுவது என்பது அன்பைப் பயிர் செய்வது. அன்பைப் பயிர் செய்வோர் அன்பைத் தான் அறுவடை செய்வார்கள்.

 

இது ஒரு சுழல். அதனால் அவர்கள் அனுபவிப்பது அனைத்தும் அன்பாகவே இருக்கும். எதை அனுபவிக்கிறார்களோ அதைப் பன் மடங்கு கூடுதலாக்கித் திருப்பிக் கொடுப்பது தம்பதியர் பண்பு.

 

ஆகவே, அவர்கள் அன்பு, மகிழ்ச்சி, இன்பம் போன்றவற்றையே ஒருவருக்கு மற்றவர் திருப்பிக் கொடுத்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் மண வாழ்க்கை, அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும் மிக்க பூஞ்சோலையாக இருக்கும்.

 

அப்பூஞ்சோலையில் தான் எதிர்காலத்தில் சாதனை படைக்கக் கூடிய குழந்தைகள் மலர்வார்கள். மேலும், அப்பூஞ்சோலையைத் தேடித்தான் வெள்ளம் போல் செல்வமும் வந்து சேரும். அதனால், அதிசயங்களின் களமாக அவர்கள் இல்லம் இருக்கும்.

 

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் போது, 75% உடல் ஈர்ப்பு, 75% தற்செயலான சந்திப்பை நிகழ்த்தக் கூடிய பிரபஞ்ச ஒத்திசைவு, 50% அளவுக்கு எண்ணச்சீரமைவு அத்துடன் புரிதல் திறன் இருப்பவர்,

 

அல்லது 75% உடல் ஈர்ப்பு, 75% தற்செயலான சந்திப்பை நிகழ்த்தக் கூடிய பிரபஞ்ச ஒத்திசைவு, 50% அளவுக்கு எண்ணச் சீரமைவு அத்துடன் தனக்கென ஒரு இலக்கைக் கொண்டிருப்பவர்,

 

அல்லது 75% உடல் ஈர்ப்பு, 75% தற்செயலான சந்திப்பை நிகழ்த்தக் கூடிய பிரபஞ்ச ஒத்திசைவு, 50% அளவுக்கு எண்ணச் சீரமைவு அத்துடன் ஆன்ம சிந்தனையுடையவர்,

 

என்கிற பிரபஞ்ச விதிகளின் அடிப்படையில் விழிப்புணர்வோடு உங்களுக்குப் பொருத்தமான இணையைத் தேர்வு செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அற்புதமான வாழ்க்கை உங்களுக்கு அமையும். அதனால், நீங்கள் பெரும் செல்வந்தராக உருவாகியே தீர்வீர்கள்.

 

மேலே பரிந்துரைக்கப்பட்ட பொருத்தங்களைப் பற்றி எதுவும் அறியாத நிலையில், உணர்ச்சிகளின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் வழி இருக்கிறது.

 

வழியே இல்லை என்று வாழ்வில் எதுவுமே இல்லை.

 

பொருத்தமில்லாமல் இணைந்து வாழும் அந்தத் தம்பதி வாழ்வியல் கல்வியான தந்த்ரா இரகசியங்கள்என்கிற நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

 

குறைந்த பட்சம் ஒரு வாரம். அதிக பட்சம் ஒரு மாதம். அவ்வளவு தான். பொருத்தம் ஏற்பட்டு விடும்.

 

முடிவாகச் சொல்கிறேன். திருமணம் ஆயிரங் காலப் பயிர். இந்தப் பயிரைக் கவனமாகப் பயிரிடுவோர் தான் செல்வந்தர்களாக உயர்கிறார்கள். ஆகவே, கவனமாகப் பயிரிடுங்கள். செல்வந்தராக உயருங்கள்.


 

பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக
விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பிரபஞ்ச விதிகள் செல்வத்தை ஈர்க்கும் இரகசியம் சொல்லாத இரகசியம் எனும் நூலில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது படித்து பயனடைய வாழ்த்துக்கள்.

 

உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Share with your friends and family

Related Articles

Selfishness

கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே

Read More

The secret to quenching a woman’s lust.

சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா?

Read More

Dangerous English Medicines

மேகற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய ‘Allopathy’ என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று… உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு

Read More

The World Reflects You

மனம் என்பது இயக்குனர். மனதின் கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் மூளை. இயந்திரத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இயக்குனரைப் பார்க்க முடியாது என்று

Read More

You Are Unique

பூமியில் வாழும் எண்ணூறு கோடி மக்களில் நீங்கள் தனித்துவமானவர்.   இது வரை வாழ்ந்து சென்ற மற்றும் வருங் காலத்தில் வாழப் போகின்ற பல்லாயிரம்

Read More

The secret to disease-free living

அதிகாலையில் எழுபவன்,   இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்,   முளைகட்டிய தானியங்களை உணவில்  பயன்படுத்துகிறவன்,   மண்பானைச் சமையலை உண்பவன்,   உணவை

Read More

MR. SAJAN

{ Author }

Web Developer & Designer

 நிரூபிக்க முடிந்த விடைகளை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Sponsor