About Course
நன்மைகள்
திருமணம் என்பது இரு பாலினத்தின் பாலியல் தேவைகளை முறையான வழிகளில் பூர்த்தி செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள களம்.
ஆனால், கணவனின் இன்பத்தை ஐந்து நிமிடத்திற்குள்ளும், மனைவியின் இன்பத்தை ஐம்பது நிமிடங்களிலும் நிகழும் படியான ஏற்றத் தாழ்வோடு மனித இனத்தை இயற்கை படைத்திருக்கிறது.
இந்நிலையில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியின் பாலியல் தேவையை நிறைவேற்றுவது எப்படி? அதாவது, தன்னுடைய காமத்தைத் தணித்துக் கொள்வதற்கான போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தாமல், மனைவியின் காம உணர்வையும் தணிப்பது எப்படி?
காம உணர்வைத் தணிக்கா விட்டாலோ பாலின்ப ஆற்றாமை என்கிற நோய் நுண்ணிய அளவிலாவது மனைவியைத் தாக்கி விடும். அந்த நோயின் தாக்குதல் காரணமாக மனைவி தன்னுணர்வற்ற நிலையில் கணவனைப் பழியெடுக்கத் துவங்கி விடுவாள். குடும்பம் சிதறாவிடினும் மனோரீதியாகக் கணவன் துன்புறுத்தப் படலாம். அதனால் இல்லற வாழ்க்கை நரகமாகலாம்.
ஆகவே இதற்கான ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும். பாலின்ப ஆற்றாமை என்கிற மனநோயால் ஏற்படும் ஆழ்மன ஆத்திரம் காரணமாக, கணவனின் வாழ்க்கை கொடூரமான முறையில் மனைவியால் தகர்க்கப் படுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?
பாலின்ப ஆற்றாமை காரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப விவகாரச் சண்டைகளுக்கு ஒரு தீர்வைக் கண்டு பிடிக்க முடியுமா? பாலியல் காரணமாகச் சிதறும் குடும்பங்களைத் தடுப்பதற்கான மந்திரம் ஏதாவது இருக்கிறதா?
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, உயிருக்குயிரான தங்கள் மனைவியைப் பாலின்ப ஆற்றாமை என்கிற மனநோயே அண்ட விடாமல் தடுப்பதற்கு கணவர்களுக்கான வழிமுறை ஏதேனும் இருக்கிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் நூல்.
பாலியல் அறியாமை தான், குடும்ப வாழ்க்கையை வாழும் நரகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால், குடும்ப அமைப்பே கூடத் தகர்க்கப் பட்டு விடுமோவென அஞ்சும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள முடியாமல் பல ஆண்கள் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த மடியில் முகத்தைப் புதைத்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
கதறியழக் கூட மடி கிடைக்காதவர்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்து விட்டு, பொறுப்பற்ற பராரிகளாக, குடிகாரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கோழைகளாக இருப்பவர்கள், உலகை எதிர் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேற்கண்ட நிலைமையை வெற்றிகரமாக எதிர் கொண்டு, குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றிக் கொள்வதற்குரிய ஞானத்தை தமிழ் சித்தர்கள், ஞானிகள் அளித்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆண்களுடைய பாலியல் அறியாமை தான் குடும்பங்களில் நிலவும் சண்டை சச்சரவுகள் முதல் கள்ளக் காதல் ஈராக, விவாகரத்து வரையிலான தீமைகள் அனைத்திற்கும் அச்சாரமிடக் கூடிய முதற் காரணியாகி, குடும்ப அமைப்பின் சிதைப்பிற்கு வலிகோலுவதாக இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.
எண்ணற்ற ஆண்கள் அனாதைகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆண் அனாதையாக்கப் படுவதன் மூலம், குழந்தைகளின் மீது தாயை மட்டுமே உறவாய்க் கொண்ட வாழ்க்கை திணிக்கப் படுகிறது.
இது ஒரு மோசமான மாற்றம். இந்த மாற்றத்தால் தேசத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெடுகிறது.
ஏனெனில், எந்த அளவிற்கு அனாதைகள் பரிதாபத்திற்கு உரியவர்களோ அதே அளவிற்கு ஆபத்தானவர்கள். அதனால் தான், எவ்விதப் பாபமும் அறியாத யாரோ பெற்ற குழந்தைகள், இந்த அனாதையாக்கப் பட்ட ஆண்களால் பாலியல் சித்திரவதை செய்யப் பட்டு கால்வாய்களில் தள்ளிக் கொல்லப் படுகிறார்கள். சமூக சூழலில் நிலவ வேண்டிய அமைதி பறி போகிறது. மேற்கண்ட நிலையை முற்றிலும் அழித்தொழிக்கக் கூடிய சக்தி பெற்ற நூல் தான் இந்த நூல்.
வெற்றிகரமான வாழ்க்கைக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக, இல்லற வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்குவதற்குரிய நெறிகளைக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு ஆசானாக இந்த நூல் விளங்கும்.
தம்பதியரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதுகாக்கின்ற தாம்பத்ய இன்பத்திற்கான அகராதியாக, இல்லற வாழ்வின் இன்பச் சாளரத்தைத் திறந்து வைப்பதாக, ஆங்கிலப் புலமையற்ற மனிதர்களுக்கான பாலறிவுக் களஞ்சியமாக, மறக்க முடியாத ஞானப் புதையலாக இந்த நூல் இருக்கும்.
தமிழ் ஞானிகளின் இணையற்ற பேரறிவின் சுருக்க உரையாக உள்ள இந்த நூல் கணவர்களின் பாலியல் அறியாமையை முழுமையாகக் களையும். இன்றைய காலத்திற்கேற்ற பார்வையைக் கணவர்களுக்கு வழங்கும்.
மனைவிக்குரிய பாலின்பங்களைத் தவறாமல் வழங்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக, (அதாவது வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது.) குடும்ப வாழ்க்கையில் தம்பதியிடையே நிலவும் பல பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும்.
இவற்றை விட முக்கியமாக ஒரு தார உறவை உறுதியாக நிலைபெறச் செய்கின்ற மன வலிமையை இருபாலருக்கும் அளிக்கும். அதன் மூலம் நிம்மதியை மட்டுமின்றி, குடும்ப அமைப்பையே பாதுகாக்கும் அரணாகத் திகழும். மேலும், தாம்பத்திய வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஆத்திசூடியாக, அற்புதப் புதையலாக உருவாக்கப் பட்டிருக்கிற இந்த நூல் இல்லற வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக மாற்றிக் காட்டும்.
இது உடலுறவு குறித்து பேசும் நூல் அல்ல. அது ஒரு எந்திரச் செயல். எந்த ஆணுக்கும் உடலுறவில் ஈடுபடத் தெரியும். தன்னுடைய காமத்தை மட்டும் தணித்துக் கொள்ளத் தெரியும். அவ்வாறு மனைவியை போகப் பொருளாக நடத்திக் கொண்டிருக்கும் செயல்தான் இல்லற வாழ்க்கையை நரகமாக மாற்றி அவனுடைய ஆயுளையே கூட குறைக்கக் கூடிய பாதகத்தைச் செய்கிறது என்கிற தகவல் தெரியாது.
மேற்கண்ட உண்மையை இந்த நூல் ஆதாரங்களோடு விளக்குவதோடு, மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நடை முறைக்கு நிரந்தரமாக முடிவுரை எழுதுகிறது.
பெண்களுக்கான சுதந்திரமும், பிரத்யேகமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்பட்ட பிறகும் கூட, ஒரு தார உறவு நிலைத்திருக்க வேண்டுமானால்,
மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்தும் போக்கு முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.
பெண்ணின் காமம் குடும்பத்திற்குள்ளேயே தணிக்கப் பட்டாக வேண்டும். அவ்வாறு தணிப்பதற்காக, ஆணின் பாலியல் அறிவு வளர்ந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தார உறவு, விரைவில் வழக்கொழிந்து போகும். குடும்ப அமைப்பு தழைத்திருக்க முடியாது.
இலங்கை, இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், மிதமிஞ்சிய மக்கள் தொகையும் கொண்ட ஒரு தேசத்தில் குடும்ப அமைப்பு சிதைவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. குற்றவாளிகளின் கூடாரமாக நாடு மாறிப் போய் விடும்.
ஆகவே, மனைவியை போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வழக்கமான பாலுறவு முறைக்கு முடிவுரை எழுதி விட்டு, மனைவிக்குரிய பாலின்பங்களைத் தவறாமல் வழங்கக் கூடிய பண்டைய தமிழ் ஞானிகளின் வழிமுறைகளை ஒவ்வொரு கணவனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த நூல் ஆண்களை வலியுறுத்துகிறது.
வலியுறுத்துவதோடு மட்டும் நூல் நின்று விடுவதில்லை. திருவிழாக் கூட்டத்தில் ஒரு தாய் தன் குழந்தையின் கையை இறுக்கமாய்ப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல, மனைவிக்குரிய இன்பங்கள் அனைத்தையும் வழங்கிய பின் கணவனுக்குரிய இன்பத்தை முடித்துக் கொள்ளும் வெற்றிகர மான வழிமுறைகளைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கிறது.
ஆழ்மன நிம்மதியோடு ஒவ்வொரு இரவும் ஆழ்ந்து உறங்கக் கூடிய, குடும்ப விவகாரச் சண்டைகளற்ற அற்புதமான வாழ்க்கையை நோக்கி, ஆண்களை அழைத்துச் செல்கிற ஒரு வழிகாட்டியாக, நூல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப் படுகின்ற உளவியல், பாலியல் அறிவை சாமான்ய குடும்பத் தலைவனுக்குத் தெளிவாகப் புரியும் படியாக, மிக எளிமையாக, அதே நேரத்தில் உளவியல் நுணுக்கங்களோடு, இந்த நூல் சொல்லிக் கொடுக்கிறது.
நூலில் காணப்படும் சில கருத்துக்கள், உங்கள் மனம் பக்குவப்படுத்தப் பட்டுள்ள விதத்திற்கு எதிராகக் காட்சியளிக்கலாம். உங்கள் கருத்துக்களை வலுப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் நினைவிற்கு வரலாம். அவை விதி விலக்குகள். உதாரணமாக, ஆண்களுக்கும் மார்பகங்கள் உண்டு என்பதும் அவற்றில் பால் சுரக்காது என்பதும் ஒரு பொதுத் தகவல். ஆனால், கல்லீரல் தன் கவனத்தைத் தவற விடும்போது, ஆண்களுக்கும் கூட பால் சுரக்கும் என்பது ஒரு விதிவிலக்கு. விதி விலக்குகள் ஒரு போதும் பொது விதியாகாது. விதிவிலக்குகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசத் துவங்கினால், வறட்டுத் தனமாக வாதிடுவதற்கும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கும் அவை உதவுமே தவிர, அறிவை வளர்த்துக் கொள்ள உதவாது.
பாலியல் அறிவை வளர்த்துக் கொள்ளாத வரை, மனைவிக்குரிய இன்பங்களை வழங்க முடியாது. இன்பங்களை வழங்காத வரை போகப் பொருளாகப் பயன் படுத்தும் கொடூரத்திலிருந்து வெளியேற முடியாது. அதிலிருந்து வெளியேறாத வரை, இல்லற வாழ்வை நிம்மதியாக வாழ முடியாது. வாழக் கிடைத்த வாய்ப்புக் கூட பறி போக நேரலாம். இது தான் இன்றைய நிலைமை.
ஆகவே காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு படிக்கத் துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக உண்மையான, சுயநலமற்ற தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக இந்த நூல் மாற்றியமைக்கும்.
ஒரு குடும்பம் அமைவதும், அமைந்த குடும்பம் வாழ்வதும், வீழ்வதும், உயர்வதும், தாழ்வதும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. மனைவியின் ஒத்துழைப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.
ஆண் சக்தி மிக்கவன் தான். ஆனால், அந்த சக்தி ஆக்கபூர்வமான காரியங்களில் பயன்படுத்தப் பட வேண்டுமானால் ஒரு பெண்ணால் அவன் அன்பு செலுத்தப் பட வேண்டும். பெண்ணின் அன்பு இல்லாமல் ஆணால் பெரும் சாதனைகளைப் புரிய முடியாது.
ஆண் என்பவன் புயல். மகா சக்தி மிக்கவன். பெண் என்பவள் புயலின் மையம். ஆணைப் போன்ற சக்தி இல்லாமல் இருக்கலாம். இயற்கையான உபாதைகள் சில இருக்கலாம். ஆனால், மையம் தான் புயலை வழி நடத்தும் சக்தி.
மனநிலை தான் வெற்றிகளின் மூலம். அந்த மன நிலையை உருவாக்குபவள் பெண். ஆகவே, பெண்ணின் மனநிலை ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும். மனநிலையைக் கெடுப்பதில் முதலிடம் வகிப்பது தணிக்கப் படாத காமம். ஆகவே, பெண்ணின் காமம் தணிக்கப் பட வேண்டும்.
பெண்ணின் முதற் தேவையான உடற் தேவை பூர்த்தி செய்யப் பட வேண்டும். பெண்ணைப் போகப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது. அது தான் குடும்ப அமைப்பைக் காப்பாற்ற உதவும். அந்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நூலின் தலையாய நோக்கம்.
மனைவியின் உடல் நலத்தையும், மன நலத்தையும் சிறப்பாகப் பேணக்கூடிய மருத்துவனாகக் கணவனை மாற்றும். அடைத்து கிடக்கின்ற அன்பின் ஊற்றுக்கள் அனைத்தையும் தூர்வாறி, பெண்ணின் மென்மையை உச்சபட்ச அளவிற்கு மிளிர வைக்கும் கணவனாக ஆணை உருவாக்கும். மொத்தத்தில் இல்லற வாழ்க்கையை சொர்க்க வாழ்க்கையாக மாற்றிக் காட்டும்.
சொர்க்கமும் நரகமும் எங்கோ வானுலகில் இருப்பவையல்ல. அவை உருவகங்கள். அகத்தால் உருவாக்கப் படுபவை. அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடைய இல்லற வாழ்வையும் சொர்க்கமாக மாற்றிக் காட்ட இந்த நூலால் நிச்சயம் முடியும். அந்த வல்லமை இந்த நூலுக்கு நிச்சயம் உண்டு.
இதோ இனி அந்த ஞானப் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குங்கள். கடலிலிருந்து கரையேறும் போது, ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டிய அளவிற்கு முத்தெடுத்து விடுவீர்கள் என்பதில் கடுகளவல்ல, அணுவளவு கூட எனக்கு ஐயம் இல்லை.
மனைவியை ஒரு போகப் பொருளாகப் பயன்படுத்தாமல், ஈடுபடும் ஒவ்வொரு முறையும் உரிய இன்பங்களை வழங்கி, மகிழ்ந்து குலாவிக் கொண்டாடி மகிழ, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அனைத்து வெற்றிக்கும் ஆனந்தமே அடிப்படை. வெற்றியே வாழ்வின் இலட்சியம். பேரானந்தம் நம் பிறப்புரிமை. அது எங்கோ வெகு தொலைவில் இல்லை. இல்லற வாழ்க்கைக்குள் தான் இருக்கிறது. அதைப் பெற்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்போமாக!
அவரவர்க்கு அமைந்த இல்லற இணையை இன்புறுத்தி மகிழ்வித்து தேவதையாய் உணரச் செய்து, வாழக் கிடைத்த இல்லற வாழ்வை ஆனந்தமாய்க் கொண்டாடிக்களித்து, நீண்ட காலம் நிம்மதியாய் வாழ்ந்து மகிழ்ந்திட, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!